Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

Boats

Senthil Velan

, ஞாயிறு, 19 மே 2024 (13:38 IST)
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மீன்பிடி படகுகள் ஆய்வு செய்யப்பட உள்ளதால் படகு உரிமையாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டுமென அந்த மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். 
 
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகள் மே 28-ஆம் தேதியும், நாட்டுப்படகுகள் ஜூன் 13-ஆம் தேதியும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட உள்ளது. 
 
இந்நிலையில் மீனவர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதில், படகு உரிமையாளர்கள் படகுகளின் பதிவுச் சான்று, மீன்பிடி உரிமம், வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் அட்டை, துறை மூலம் வழங்கப்பட்ட தொலைதொடர்பு கருவிகள் ஆகியவைகளை தயார் நிலையில் வைத்திருந்து, ஆய்வு செய்யும் நாளில் ஆய்வுக்குழுவிற்கு அனைத்து விவரங்களையும் அளித்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 
 
அத்துடன், அனைத்து மீன்பிடிப் படகுகளுக்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக தெரிவிக்கப்பட்ட வர்ணம் பூசி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். 

மேலும் விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட எரியெண்ணெய் வாங்கும் படகுகள் நேரடி ஆய்வின் போது ஆய்விற்கு உட்படுத்தவில்லையெனில் அப்படகுகளுக்கு விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன், அப்படகுகள் இயக்கத்தில் இல்லாததாக் கருதி அப்படகுகளின் பதிவு சான்றிதழை உரிய விசாரணைக்கு பின் ரத்து செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளார். 

 
ஆய்வு நாளன்று படகுகளை ஆய்வுக்கு உட்படுத்தாமல் பின்னொரு நாளில் ஆய்வு செய்யக்கோரும் படகு உரிமையாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட மாட்டாது என அனைத்து படகு உரிமையாளர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்