தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர் திடீர் தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதலில் மீனவர்கள் வைத்திருந்த 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போனதாகவும் வெளியாகி உள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மற்றும் கோடியக்கரை அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாகவும் இந்த கடற்கொள்ளையர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது
இந்த கொள்ளையர்கள் மீனவர்களின் படகை வழி மறித்து ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான மீன் பிடிக்கும் வலைகள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட பொருட்கள் பறித்து சென்றதாகவும் அதுமட்டுமின்றி ஒரு மீனவரை கடுமையாக தாக்கியதில் அவரது தலையில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்ததாகவும் இதையடுத்து மற்ற மீனவர்கள் அவரை கரைக்கு கொண்டு வந்து மருத்துவமனையில் அனுமதித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினரின் தொந்தரவு தான் இருந்த நிலையில் தற்போது இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலும் ஏற்பட்டிருப்பதை அடுத்து மீனவர்கள் அச்சம் கொண்டிருப்பதாகவும் இது குறித்து மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.