கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து நாம் தமிழர் என்ற கட்சியை நடத்தி வரும் சீமான் பெற்ற ஒட்டு சதவிகிதத்தை ஒரே வருடத்தில் கட்சி ஆரம்பித்து கமல்ஹாசன் பெற்றுவிட்டதால், அந்த கடுப்பில் கமல்ஹாசன் மீது சீமான் அதிக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
ஏற்கனவே கமல்ஹாசன் வெள்ளையாக இருப்பதால் அவருக்கு மக்கள் ஓட்டு போட்டுவிட்டதாக கூறிய சீமான், தற்போது தமிழக மக்களிடம் ஓட்டு வாங்க போராட்டம் நடத்த தேவையில்லை, பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தினாலே போதும் ஓட்டு வாங்கிவிடலாம் என்று கூறி மீண்டும் கமல்ஹாசனை சீண்டியுள்ளார்.
மேலும் தமிழக மக்கள் இன்னும் சினிமா மோகத்தில் இருந்து மீளவில்லை என்றும் சீமான் கமல்ஹாசனை மறைமுகமாக தாக்கியுள்ளார். ஆனால் சீமானே அடிப்படையில் ஒரு சினிமாக்காரர்தான். அதன்பின்னர் தான் அரசியல்வாதி என்பதை அவர் மறந்துவிட்டு பேசுவதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
என்னதான் ஒருசில சதவிகிதங்களை கமல்ஹாசன், சீமான், தினகரன், விஜயகாந்த் ஆகியோர்களின் கட்சிகள் பிரித்தாலும் ஆட்சியை இந்த கட்சிகள் எந்த காலத்திலும் பிடிக்க முடியாது என்றும், அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் இந்த கட்சிகளில் இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சீமான், கமல்ஹாசன், தினகரனை,விஜயகாந்த் தவிர அந்த கட்சியில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர் யாரையும் பெரும்பாலான மக்களுக்கு தெரியாது என்பதே இந்த கட்சிகளின் மிகப்பெரிய பலவீனமாக கருதப்படுகிறது.