கரூரில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது., தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிளாஸ்டிக்குக்கு மாற்று பொருளான பயோ பைகள் தயாரிப்பதற்கு உரிய மூலப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து வர வைக்கப்படுவதற்கு ஏழு எட்டு மாதங்கள் ஆகிறது தயாரிப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், பிளாஸ்டிக் கடைகளில் அபராதம் விதிப்பதை விட, எங்கே தயாரிக்கப்படுகின்றதோ, அங்கேயே சென்று பிளாஸ்டிக் நிறுவனங்களை நிறுத்த வேண்டுமென்றும் தெரிவித்தார்.
அதைவிட்டு, விட்டு, கடைக்கு சீல் வைப்பது, அபராதம் என்பது முறையல்ல, அதை எதிர்த்து போராடுவதற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தயங்காது என்றார். மேலும்., சென்னையில் ஹோட்டல்கள் மட்டுமல்லாது மேன்ஷன்கள் தங்கும் விடுதிகளில் தண்ணீருக்காக அல்லல்படுகின்றனர் தங்கியிருப்பவர்களை உடனடியாக வெளியேற்றப்படுகிறார்கள்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உரிய நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எழுத்தாளர் ஜெயமோகன் மீது வியாபாரிகள் வழக்கு கொடுத்த கொடுத்த போதும் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய தயங்குகின்றனர்.
வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி அளித்தார்.