நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிட சீட் வேண்டும் என பாஜக தரப்பு அதிமுகவை கேட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு பகுதிகளுக்கும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக மற்றும் திமுக கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றுள்ளது.
நேற்றுடன் அதிமுக விருப்பமனு பெறும் காலக்கெடு முடிவடைந்ததையடுத்து இரண்டு தொகுதிகளிலும் சேர்த்து போட்டியிட மொத்தம் 90 பேர்கள் மட்டுமே விருப்பமான அளித்துள்ளதாக தெரிகிறது. இதற்கான நேர்கணாலும் நேற்று நடைபெற்று உத்தேச பட்டியலும் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், நாங்குநேரி சட்டசபை தொகுதியில் பாஜக போட்டியிட விரும்புவதாக தெரிகிறது. எனவே அதிமுக இதை பரிசலிக்குமா அல்ல கண்டுக்கொள்ளாமல் தனது வேட்பாளரை அறிவிக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
இந்த சூழலில்தான் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று விஜய் குறித்து பேசியதோடு இடைத்தேர்தல் குறித்தும் பேசியுள்ளார். அவர் கூறியதாவது இடைத்தேர்தலில் பாஜக சார்பாக வேட்பாளர் நிறுத்தப்படுவது குறித்து கட்சித்தலைமை விரைவில் முடிவு எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.