தமிழகத்தில் திமுக அதிமுக கட்சிகள் பாணியில் கடந்த சில மாதங்களாக பாஜக அரசியல் செய்து வருகிறது. குறிப்பாக போராட்டம் என்ற ஒற்றை துருப்புச் சீட்டு தான் திமுக அதிமுகவின் அஸ்திரமாக இருந்து வந்தது அந்த வகையில் தற்போது கடந்த சில மாதங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்த பாஜக மீண்டும் தனது பாணியில் யாத்திரை ஒன்றை நடத்த திட்டமிட்டது
நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை திருத்தணி திருச்செந்தூர் வரை நடத்த திட்டமிட்டிருந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தது. தடையை மீறி யாத்திரை நடத்த முயன்ற தமிழக பாஜக தலைவர் முருகன் உள்பட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்
இந்த நிலையில் வேல் யாத்திரைக்கு தடை விதித்த தமிழக அரசை எதிர்த்து அவசர மனு ஒன்று பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாஜக தாக்கல் செய்த அவசர மனு மீது இன்று விசாரணை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த விசாரணைக்கு பின்னர் நிபந்தனைகளுடன் வேல் யாத்திரை நடத்த அனுமதிக்கப்படுமா? அல்லது தமிழக அரசின் தடைக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்