மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் அந்த சர்ச்சைக்கு முடிவு நேற்று தெரிந்தது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து பாஜகவின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, அதிமுக, பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என தற்போது சொல்ல தேவையில்லை. தேர்தல் நேரத்தில் முதல்வர் வேட்பளர் யார் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறி அதிர்ச்சி கிளப்பியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து தற்போது பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வருகிற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக பிரதிநிதிகள் தமிழக சட்டப்பேரவைக்கு செல்வர். பாஜகவால் கைகாட்டபடுபவர்கள் தான் ஆட்சி அமைக்க முடியும். திமுகவைச் சேர்ந்த பலர் பாஜகவில் சேர்ந்து வருகின்றனர். எம்எல்ஏக்கள் சிலரும் சேர தயாராக உள்ளனர். மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது என தெரிவித்துள்ளார்.