நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசு மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடாக 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யும் மசோதா ஒன்றை தமிழக சட்டமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது இந்த மசோதா ஆளுநரின் கையெழுத்துக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் ஆளுநர் இது குறித்து விரைவில் முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அதிமுக, திமுக, பாஜக உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் ஆளுநர் இந்த மசோதாவுக்கு விரைவில் கையெழுத்திட வேண்டும் என்றும் இந்த ஆண்டே இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்
குறிப்பாக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் சமீபத்தில் ஆளுநர் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவில் கையெழுத்திட வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திடீரென பாஜகவின் கலை கல்வி பிரிவின் தலைவர் நந்தகுமார், 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கூடாது என தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பாஜகவின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்திய நிலையில் பாஜக தலைமை அதிரடியாக நடவடிக்கை எடுத்து பாஜகவிலிருந்து அவரை நீக்கி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது