பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் சிஏஏ சட்டம் அமலுக்கு வருவதாக அறிவித்தது. பாஜக அரசு அறிவித்தபடி, நேற்று சிஏஏ சட்டம் அரசிதழில் வெளியானதாக அறிக்கை வெளியிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.
இதற்கு காங்கிரஸ், திமுக, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், மத ரீதியிலான பிளவுக்கு வழிவகுக்கும் பாஜக என்று புரட்சி பாரதம் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளதாவது:
''மத ரீதியிலான பிளவுக்கு குடியுரிமை திருத்தச் சட்டம் என்றபெயர் வைத்ததோடு அதனை அமல்படுத்தியுள்ள மத்தியஅரசினை புரட்சி பாரதம் கட்சி சார்பில் கடுமையாக கண்டிக்கிறோம். 2019-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டஇச்சட்டத்தினை தேர்தல் காரணமாக மட்டுமே தற்போதுபாசிச பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது.
மக்களிடையே பிரிவினைவாதத்தை உண்டாக்க வேண்டும், தேர்தலின் போதுமத ரீதியிலான அசாதாரண சூழலை உண்டாக்கி பலனடையவேண்டும் என்ற எண்ணத்திலேயே பாஜக இதனை செய்துள்ளது. சிஏஏ எனப்படும் இந்த குடியுரிமை சட்டத்தின் மூலம்இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழ் மக்களுக்கும் ஏற்படும்அநீதியை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
சொந்தநாட்டிலேயே இஸ்லாமியர்கள் இரண்டாம் நிலை குடிமக்களாகவாழும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குடியுரிமைசட்டத்தினை நீக்குவதற்கு ஜனநாயக முறையில் புரட்சி பாரதம்கட்சி தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கும்..!''என்று தெரிவித்துள்ளார்.