Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்பு பூஞ்சை தொற்று நோயையும் அரசு காப்பீட்டு திட்டத்தில் சேருங்கள்… ஓபிஎஸ் வேண்டுகோள்!

Webdunia
சனி, 29 மே 2021 (08:50 IST)
தமிழகத்தில் அதிகமாக பரவும் கருப்பு பூஞ்சை தொற்றை தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சேருங்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் விடுபடாத நிலையில் அடுத்ததாக கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, என இரண்டு புதிய நோய்கள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையால் நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில் இந்த பூஞ்சை தொற்றுக்கான சிகிச்சையையும் தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''கருப்பு பூஞ்சை பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் அதை சமாளிப்பது என்பது அரசுக்கு மிகப்பெரிய சவலாகிவிடும். எனவே கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தினை போதுமான அளவில் இருப்பு வைத்துக் கொள்ளவும், இந்நோயினை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவும், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments