பிரபல கார் நிறுவனமான பி.எம்.டபிள்யூ தனது அதிவேக புதிய மின்சார காரை அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.
உலகம் முழுவதும் கார் உற்பத்தியில் முன்னணியில் விளங்கும் நிறுவனங்களில் முக்கியமானது பி.எம்.டபிள்யூ. பலவிதமான சொகுசு கார்களை உற்பத்தி செய்து வரும் பி.எம்.டபிள்யூ நிறுவனம் சமீப காலமாக மின்சார கார் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் முதன்முறையாக தனது மின்சார காரை பி.எம்.டபிள்யூ அறிமுகப்படுத்த உள்ளது. ஐ.எக்ஸ் எனப்படும் இந்த மின்சார கார் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 425 கி.மீ தூரம் பயணிக்கும். மேலும் ஸ்டார்ட் செய்த 6 நொடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டிப்பிடிக்கும் ஆற்றலுடையது என கூறப்பட்டுள்ளது. இந்த கார் டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.