கன்னியாகுமரியில் பலத்த சூறை காற்று வீசுவதை அடுத்து திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் ஆகிய பகுதிகளுக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன்னர் கன்னியாகுமரி கடலில் சூறைக்காற்றுடன் பல அடி உயரத்திற்கு அலைகள் எழும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு ரத்து செய்யப்பட்டதாக பூம்புகார் கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது
மறு உத்தரவு வரும் வரை திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு ரத்து செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் அறிவிப்பு சுற்றுலா பயணிகளுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிபிடத்தக்கது.