Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 6 May 2025
webdunia

பூட்டிய வீட்டில் மாதக்கணக்கில் அழுகி கிடந்த சடலங்கள்! - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

Advertiesment
Chennai Crimes

Prasanth Karthick

, வியாழன், 30 ஜனவரி 2025 (15:25 IST)

சென்னை அருகே திருமுல்லைவாயில் பகுதியில் பூட்டிய வீட்டில் பல மாத காலமாக அழுகி கிடந்த இருவரது பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை அருகேயுள்ள திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் 70 வயதான சாமுவேல் சங்கர். இவரது மகள் சிந்தியா (35). கடந்த சில மாதங்களாகவே இவர்களது வீடு பூட்டிய நிலையிலேயே இருந்த நிலையில் நாளுக்கு நாள் வீட்டிலிருந்து அதிக துர்நாற்றம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீஸார் சென்று திறந்து பார்த்தபோது அங்கு இருவரது சடலங்களும் அழுகி மோசமான நிலையில் இருந்துள்ளது.

 

இதுகுறித்து போலீஸார் உடனடியாக வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர்கள் இருவரும் இறந்து 3 மாதங்களுக்கும் மேல் ஆகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. சாமுவேல் சங்கர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் எபினேசர் என்ற மருத்துவர் அவருக்கு சிகிச்சை பார்த்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் எபினேசர் சிகிச்சை பார்த்தபோது சாமுவேல் இறந்ததாகவும், அதனால் சிந்தியா மருத்துவரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது மருத்துவர் எபினேசர் சிந்தியாவை தள்ளிவிட்டதில் அவரும் கீழே விழுந்து தலையில் அடிப்பட்டி இறந்ததால், எபினேசர் வீட்டை பூட்டி விட்டு ஓடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீஸார் எபினேசரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு வீட்டில் இருவர் இறந்து மாதக்கணக்கில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவில் இன்னொரு ஏஐ அறிமுகம்.. ஒரே வாரத்தில் ஓரம் கட்டப்பட்டதா டீப் சீக்?