மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் எலும்பு புற்றுநோய் மற்றும் எலும்பு நேர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் எலும்புகளை மாற்று அறுகை சிகிச்சை செய்யபட்டு வருகிறது, இதற்கு சென்னையில் மட்டுமே எலும்பு வங்கி செயல்பட்டு வருகிறது.
இதனால் தென் தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் எலும்பு வங்கி தொடங்கப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
எலும்பு சம்மந்தமான அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும் நிலையில் அரசு மருத்துவமனையில் இந்த எலும்பு வங்கி வரும்பட்சத்தில் இலவசமாக பொதுமக்கள் பயனடைவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.