Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

*கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் விற்பதும் அடியோடு அகற்றப்பட வேண்டும்!- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Advertiesment
Tamil Nadu
, செவ்வாய், 11 ஜூலை 2023 (17:52 IST)
தமிழ்நாடு கடந்த இரண்டு ஆண்டுகளாக அடைந்து வரும் வளர்ச்சிக்கு அமைதியே அடிப்படை. அந்த அமைதியை நிலைநாட்டி, குற்றங்கள் நடக்கும் முன்னரே அதைத் தடுக்கும் துறையாகக் காவல்துறை திகழவேண்டும்’’   என்று    முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் விற்பதும் அடியோடு அகற்றப்பட வேண்டும்!

போதைப்பொருட்கள் பயன்பாடு எனும் சமூகத்தீமை களையப்படுவதை ஒவ்வொரு மாவட்ட எஸ்.பி.யும் உறுதிசெய்திட வேண்டும்!

பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தீவிர கவனம் செலுத்தி, குற்றவாளிகள் தண்டனை பெறுவதை உறுதிசெய்திட வேண்டும்!

காவல் நிலைய மரணங்களே இருக்கக்கூடாது; எந்த வழக்கானாலும் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்!

தமிழ்நாடு கடந்த இரண்டு ஆண்டுகளாக அடைந்து வரும் வளர்ச்சிக்கு அமைதியே அடிப்படை. அந்த அமைதியை நிலைநாட்டி, குற்றங்கள் நடக்கும் முன்னரே அதைத் தடுக்கும் துறையாகக் காவல்துறை திகழவேண்டும்’’   என்று தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!