தமிழகத்தில் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை தொடங்கிவிட்ட நிலையில் இன்னும் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை மட்டுமே தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் எப்போது போர் 4ஜி சேவை தொடங்கப்படும் என்பது குறித்த தகவலை பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட தலைமை பொது மேலாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 4ஜி சேவை ஏப்ரல் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தற்போது 4.4 லட்சம் பைபர் இணைப்புகள் உள்ளதாகவும் மாதந்தோறும் 16 ஆயிரம் புதிய இணைப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை செய்ய வேண்டும் என்பதே பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கொள்கை என்றும் தமிழகத்தில் உள்ள 12,000 மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் 7000க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் கண்ணாடி இழை கேபிள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் 2ஜி மற்றும் 3ஜி சேவை சிம் கார்டுகளை பயன்படுத்தி வரும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் 4ஜி சிம்மை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி சேவை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.