காட்டுயானை சின்னதம்பிக்கு இயற்கை உணவுகளை சாப்பிட தந்து பழக்கி மறுபடியும் அதை ஏன் காட்டுக்குள் அனுப்பக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தற்போது ஊடகமெங்கும் சின்னத்தம்பியின் செய்திகளாகவே இடம் பிடித்து வந்தன. இந்நிலையில் காட்டுயானை சின்னத்தம்பியை பிடித்து முகாமில் வைத்து முறையாக பராமரிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த வழக்கில் அதன் நடமாட்டம் குறித்து தமிழக அரசு நேற்று அறிக்கை அளித்தது.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று நீதிபதிகள் மணிக்குமார், சுப்ப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி சின்னத்தம்பி யானையை முகாமுக்கு அனுப்புவது தொடர்பாக நாளை விரிவான விளக்கமும் தரப்படும் எனவும் கூறினார்.
மேலும் விசாரணையை நாளை தள்ளிவைக்க வேண்டும் என நாளை யானைகள் நிபுணர் அஜய் தேசாய் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்றும் விஜய் நாராயணன் கூறினார்.
இந்நிலையில் நீதிபதிகள் சின்னத்தம்பி யானைக்கு இயற்கையான உணவுகளை கொடுத்து பழக்கி ஏன் காட்டுக்குள் அனுப்பி கூடாது என கேள்வி எழுப்பினர். மேலும் விவசாய நிலத்தில் உள்ள பயிர்களை உண்பதால் அது வனப்பகுதியை நாடாமல் உள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.
தற்போது சின்னத்தம்பியை பாதுகாக்க வேண்டும். அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என நீதிபதி வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.