Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சேலம் விவசாயிகள் மீதான வழக்கு- அமலாகத்துறை கைவிட திட்டம் என தகவல்

Salem farmers

Sinoj

, வியாழன், 4 ஜனவரி 2024 (14:52 IST)
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள ராமநாயக்கன் பாளையம் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளான கிருஷ்ணன், கண்ணையன் ஆகியோருக்கு அவர்களின் சாதிப்பெயரைச் சொல்லி அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பிய விவகாரத்தில்  இவ்வழக்கை கைவிட அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள ராமநாயக்கன் பாளையம் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளான கிருஷ்ணன், கண்ணையன் ஆகியோருக்கு அவர்களின் சாதிப்பெயரைச் சொல்லி அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஜாதி பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் கண்ணையன், கிருஷ்ணன் ஆகியோர் சேலம் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இந்த விவகாரத்தில் சேலம் வனத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தடை செய்யப்பட்டுள்ள பட்டியலில் உள்ள காட்டு விலங்குகளை கொன்றுவிட்டதாக வனத்துறையினர் தரப்பு புகார் அளிக்கப்படதாகவும், அதன்படிப்படையில், வழக்குப் பதிவு செய்து சம்மன் அனுப்பியதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சாதி பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய விவகாரம் சர்ச்சையாகி,  கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில்,சேலம் ஆத்தூர் விவசாயிகள் ஈதான வழக்கை கைவிட அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிப்பு.. காணொளி மூலம் ஆஜர்..!