Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜல்லிக்கட்டில் சாதிப் பெயர்களை கூற தடை..! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.!!

Madurai Court

Senthil Velan

, வியாழன், 4 ஜனவரி 2024 (16:28 IST)
ஜல்லிக்கட்டு காளையை அவிழ்க்கும் போது உரிமையாளர் பெயரோடு சாதியின் பெயரை கூறக்கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  
 
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அவிழ்க்கும் போது உரிமையாளர் பெயரோடு சாதி பெயரை குறிப்பிடக் கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற உத்தரவிடக் கோரி மதுரை மானகிரியை சேர்ந்த செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 
ALSO READ: குண்டும் குழியுமாக மாறிய மரண சாலை..! கொட்டும் மழையில் மக்கள் போராட்டம்..!!

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் முன் விசாரணைக்கு வந்தது.
இதில் காளையின் உரிமையாளர் பெயரோடு சாதியின் பெயரை கூறி ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்க்க கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பிக்கும் முன் தீண்டாமை உறுதிமொழி எடுப்பது குறித்து மனுதாரரின் கோரிக்கையை பரிசீலனை செய்யவும் அரசுக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

LPG டேங்கர் லாரிகள் கடந்த 1ம் தேதி முதல் வேலை நிறுத்தம்!