9 உறுப்பினர்களை கொண்ட காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் தலைமையிடம் பெங்களூரில் அமைய உள்ளது.
நீண்ட போராட்டத்துக்குன் பின் காவிரி நிதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. காவிரி வரைவு திட்டம் உச்சநீதிமன்றத்தில் இறுதி செய்யப்பட்டு ஜூன் 1ஆம் தேதிக்குள் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி தற்போது மத்திய அரசு, 9 உறுப்பினர்களை கொண்ட காவிரி ஒழுக்காற்றுக்குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இதன் தலைமையிடம் பெங்களூரில் அமைய உள்ளது. தமிழகத்தில் இருந்து 2 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். கர்நாடகா மாநிலம் இதுவரை எந்த உறுப்பினர்களையும் நியமிக்கவில்லை.
கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்த காவிரி ஒழுங்காற்றுக்குழு மூலம் தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.