தமிழகத்தை உலுக்கிய குட்கா ஊழல் வழக்கில் சிக்கியவர்களுக்கு 6 மாதங்களுக்குப் பிறகு ஜாமீன் வழங்கியுள்ளது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.
2014 ஆம் ஆண்டும்தமிழகத்தில் தடை செய்ய்ப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்பட்டு வருவதாக திமுக சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் லஞ்சம் பெற்றுக்கொண்டு குட்கா விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருந்ததாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல் துறை டிஜிபி ராஜேந்திரன் போன்றோர் மீது குற்றச்சாட்டு எழுப்பியது.
இது தொடர்பாக செப்டம்பர் 6-ந்தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் உள்ளிட்ட பல அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்வழக்கில் குட்கா நிறுவன உரிமையாளர் மாதர ராவ், கலால் வரி அதிகாரி பாண்டியன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சிலரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மாதவராவ், சீனிவாசராவ், உமாசஙகர் குப்தா ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் ஜாமீன் மறுக்கப்பட்டது.
இதையடுத்து ஆறுமாதங்களுக்குப் பிறகு இப்போது இவர்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது சிபிஐ சிறப்பு நீதிமன்றம். நீதிபதிகள் மூன்று பேரும் அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு தலா 2 லட்சம் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த ஜாமீனை வழங்கியுள்ளனர்.