அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பழனி முருகன் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பழனி முருகன் கோவிலில் புகைப்படம் வீடியோ எடுக்கும் சாதனங்களுக்கும் தடை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் செல் போன் பாதுகாப்பு மையங்களில் பக்தர்கள் செல்போனை ஒப்படைத்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. செல்போன் மற்றும் புகைப்படம் வீடியோ எடுக்கும் கருவிகளை கட்டணம் செலுத்தி ஒப்படைத்து விட்டு செல்லவும் என்றும் தரிசனம் முடிந்தவுடன் மீண்டும் தங்களது உடைமைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் பழனி முருகன் கோவில் அதிகாரி தெரிவித்துள்ளார்