சிமெண்ட் விலை மூட்டைக்கு குறைந்தபட்சம் 60 ரூபாய் உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் 490 ரூபாயாக இருந்த சிமென்ட் விலை கடந்த செப்டம்பர் மாதம் 420 ரூபாயாக குறைந்தது. மேலும் அரசு டான்செம் நிறுவனம் மூலம் வலிமை சிமெண்ட் வர உள்ளதால் அந்த சிமெண்ட் தமிழக சந்தைக்கு வரும் போது சிமெண்ட் விலை மேலும் குறையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக சிமெண்ட் விலை உயர வாய்ப்பு உள்ளதாக உற்பத்தியாளர்கள் சங்கம் தற்போது தெரிவித்துள்ளது. ஆம், சிமெண்ட் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியின் விலை உயர்ந்துள்ளது. இதனால் சிமெண்ட் விலை மூட்டைக்கு குறைந்தபட்சம் 60 ரூபாய் உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.