Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
, புதன், 1 பிப்ரவரி 2023 (17:39 IST)
தமிழ்நாட்டில் அடுத்த 2   நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்தம் நிலவுவதால், இன்று தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை- திரிகோணமலையில் இருந்து கிழக்கிலும், காரைக்காலில் இருந்து தென் கிழகு பகுதியிலும்   நிலை கொண்டுள்ளது.

இது மெதுவாக மேற்கு , தென் மேற்குத் திசையில் நகர்ந்து இன்று மாலையில் இலங்கை கடற்பகுதியை நோக்கி கடக்கக்கூடும் என்பதால்  தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தமிழ் நாட்டில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் லேசான மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, திரு நெல்வேலி, ராம நாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில்  கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 ALSO READ: நியூசிலாந்தில் தொடர் கனமழை- வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி
நாளையும்,  தமிழ் நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடிமின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனக் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்  விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற கணவர்.... பரபரப்பு சம்பவம்