Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

Webdunia
வியாழன், 9 மார்ச் 2023 (19:25 IST)
கிழக்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: கிழக்கு திசை  காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழக  மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் அதனையொட்டிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், குறைந்தபட்சம் 22-23 டிகிரி செல்சியஸ் அளவிலும், அதிகபட்சமான 32-34 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்ப நிலை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் 47வது அதிபராகும் வாய்ப்பு உள்ளது: டிரம்ப்

இன்று பிற்பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

லெபனான் பேஜர் தாக்குதலுக்கு உத்தரவிட்டது நான்தான்: ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்!

கழுத்தை நெரித்து உயிருடன் புதைத்த கூலிப்படை! உயிருடன் வந்து நின்று அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்!

2600 லிட்டர் தாய்ப்பால் தானம்.. கின்னஸ் சாதனை பெண்ணுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments