Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சந்திராயன் 3 மாணவர்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது - இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல்

சந்திராயன் 3 மாணவர்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது - இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல்
, சனி, 28 அக்டோபர் 2023 (19:49 IST)
கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள சுகுணா கல்வி குழும மாணவர்களுடன்  சந்திராயன் -  3 குறித்து அதன்  திட்ட இயக்குனர் வீரமுத்துவேல்  விளக்கமளித்து கலந்துரையாடினார்.


இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல், சந்திரயான் 3 மிஷன் முடிந்து விட்டது. சந்திராயன் லேன்ட் ஆன பின்பு புழுதி ஒரு அச்சுறுத்தலாக இல்லை. இதுவரை யாரும் போகாத இடங்களில் சந்திராயன் இறக்கப்பட்டது.

நிலவிற்கு மனிதர்களை அனுப்புவது என்பது நீண்டகால திட்டம்.  அதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.நிலவிற்கு மனிதர்கள் போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. சந்திராயான் 3 தரையிரக்கம் என்பது மிகவும் மகிழ்வான ஒன்று.

பிரதமர் நேரடியாக கலந்துரையாடிது மகிழ்ச்சி அளிக்கின்றது.இஸ்ரோவில் பல திட்டங்கள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கின்றது.படிப்பது மட்டுமே முக்கியம். கல்லூரியில் இருந்து வெளியே வரும் போது நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். சந்திராயன் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்பது தவறான தகவல்.

விண்வெளி ஆராய்ச்சியில் பிறநாடுகளுக்கு இணையாக நம்முடைய செயல்பாடு இருக்கின்றது. சந்திராயன் தென்துருவத்தின் அருகில்தான் இறக்கப்பட்டுள்ளது.தென்துருவத்தில் இறக்கப்பட வில்லை இதில் மறைக்க எதுவுமில்லை.

மாணவர்கள் மத்தியில் விண்வெளி குறித்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது.மாணவர்க தனக்கும் இஸ்ரோவில் பணியாற்றுபவர்களுக்கும்  நிறைய கடிதம் எழுதி இருக்கின்றனர். மாணவர்கள் சந்திராயன் குறித்து ஆர்வமாக துல்லியமாக கடிதம் எழுதி இருப்பது என்பது சந்தோஷமாக இருக்கின்றது.

எந்த பள்ளியில் இருந்து படிக்கின்றோம் என்பது முக்கியமல்ல,மாணவர்கள் நிறைய ஆராய்ச்சி திட்டங்களை வகுக்க வேண்டும், ஏனென்றால்  நானே அரசு பள்ளியில் இருந்து வந்தவன்தான் என விஞ்ஞானி  வீரமுத்துவேல் தெரிவித்தார்.

 Edited By: Sugapriya Prakash

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேவருக்கு ஒரு பொது மணிமண்டபம், ஒரு VIP மணிமண்டபம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!