Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவச உணவை நிறுத்திய சென்னை அம்மா உணவகங்கள்!

Webdunia
திங்கள், 1 ஜூன் 2020 (10:49 IST)
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னை அம்மா உணவகங்களில் அளிக்கப்பட்டு வந்த இலவச உணவு நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் மக்கள் பலர் உணவின்றி தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிக்கும் பொருட்டு இரண்டாம் கட்ட ஊரடங்கு முதல் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச உணவு அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது.

நான்காம் கட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அதற்கு பிறகு இலவச உணவு அளிப்பது குறித்து அறிவிப்புகள் வெளியாகததால் இன்று முதல் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மொத்தம் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஊரடங்கு காலத்தில் சுமார் 1 கோடிக்கும் மேலானவர்கள் அம்மா உணவகங்கள் மூலமாக உணவு பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments