சென்னை வங்கிக்கொள்ளை: முக்கிய குற்றவாளி முருகன் கைது!
, திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (12:01 IST)
சென்னை வங்கிக்கொள்ளை: முக்கிய குற்றவாளி முருகன் கைது!
சென்னை அரும்பாக்கம் அருகே தனியார் நகை கடன் வழங்கும் வங்கியில் நகைகள் கொள்ளை போன நிலையில் இந்த கொள்ளைக்கு முக்கிய காரணமான முருகன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் நேற்று முன்தினம் காவலாளியை கட்டிப்போட்டு விட்டு 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இதனையடுத்து இந்த வங்கியில் அடமானம் வைத்து இருந்தவர்களை நகைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் இதே வங்கியில் இன்னொரு கிளையில் மண்டல மேலாளராக பணியாற்றிய முருகன் என்பவர்தான் தனது கூட்டாளிகளுடன் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது
முருகன் தான் இந்த கொள்ளைக்கு தலைவராக இருந்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து முருகன் உள்பட 3 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மொத்தம் கொள்ளை போன 32 கிலோ நகைகளில் 20 கிலோ கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மீதமுள்ள 12கிலோ நகைகள் ஒருசில கூட்டாளிகள் பங்கு எடுத்துக் கொண்டதாகவும் அவர்களையும் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது
அடுத்த கட்டுரையில்