சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் கேட்டுள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
தமிழகத்திலேயே கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்த பகுதியாக சென்னை உள்ளது. அங்கு நேற்று மட்டும் 176 பேருக்குக் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மொத்தமாக 1082 பேருக்குக் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடிதத்தில் சென்னையிலுள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளையும் மே 2ஆம் தேதிக்குள் அரசி்டம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டதாகவும், அந்த பள்ளிகளில் கொரோனா தடுப்பு மையங்களை அமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் இதற்கு தனியார் பள்ளி உரிமையாளர்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு உருவாகியுள்ளது. உலக சுகாதார மையம் பள்ளி கட்டிடங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக, முகாமங்களாக பயன்படுத்த கூடாது எனக் கூறியிருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.