சென்னையில் குப்பையை கொட்டினால் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த உத்தரவு கால வரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் கண்ட இடங்களிலும் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் சென்னையில் குப்பைகள் கொட்டும் வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றிற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு நேற்று அறிவிப்பு வெளியானது.
இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இந்த கட்டண திட்டத்தை திரும்ப பெறாவிட்டால் திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த கட்டணத்தை ரத்து செய்யும் என கூறியிருந்தார். இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் குப்பை கொட்டினால் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற திட்டம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.