Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ரெம்டெசிவிரை கள்ள சந்தையில் விற்ற டாக்டர் – தாம்பரத்தில் கைது!

ரெம்டெசிவிரை கள்ள சந்தையில் விற்ற டாக்டர் – தாம்பரத்தில் கைது!
, வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (08:28 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு உள்ள நிலையில் அதை கள்ள சந்தையில் பதுக்கி விற்ற டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் ரெம்டெசிவிர் மருந்துக்கான தட்டுப்பாடு எழுந்துள்ளது. இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை தமிழக அரசு நேரடியாக கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் கவுண்டர்கள் அமைத்து விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் வாங்கி அதிக விலைக்கு விற்கும் கும்பலும் திரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாம்பரம் தனியார் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் முகமது இம்ரான்கான் என்பவர் ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் வாங்கி வெளியே 20 ஆயிரம் வரை விலை வைத்து விற்றதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் மேற்கு தாம்பரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அருகே நடந்த வாகன சோதனையின்போது முகமது இம்ரான்கான் பிடிபட்டதுடன் உண்மையும் ஒத்துக்கொண்டுள்ளார். அதை தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்துள்ளதுடன் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா நோயாளிகள் 3000 பேர் தலைமறைவு… கையைப் பிசையும் சுகாதாரத்துறை!