இன்று நள்ளிரவு முதல் சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதை அடுத்து சென்னை மக்கள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் அவர்கள் சற்றுமுன் தெரிவித்ததாவது:
அண்ணா சாலை உட்பட சென்னையின் பிரதான சாலைகள் மூடப்படும். உரிய காரணங்களின்றி வெளியே சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அருகில் உள்ள கடைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் செல்ல வேண்டும்
சென்னை மாநகருக்குள் 288 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. திருமணம், அவசர மருத்துவ தேவை தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது. முகக்கவசம் அணியாமல் வெளியேவருவோர் மீதும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்
பக்கத்து கடைகளில் சென்று காய்கறி, மளிகைக் கடைகளை வாங்க வேண்டும். 2 கி.மீ. தூரம் வரை நடந்தே சென்று காய் வாங்க வேண்டும். கார், இரு சக்கர வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் பொதுமுடக்கத்தை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும். மேலும் ஊரடங்கை மீறுபவர்களை சென்னையில் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். மேலும் பத்திரிக்கையாளர்களாக இருந்தாலும் தினசரி சென்னை வந்து செல்ல முடியாது. அரசின் சிறப்பு அனுமதி பெற்று வேண்டுமானால் சென்னைக்குள் வந்து செல்லலாம். இவ்வாறு சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.