தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் 100 கி.மீ வேகத்தில் செல்லலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் நாள்தோறும் பலவகை வாகனங்கள் பயணித்து வரும் நிலையில் விபத்துகளும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் 100 கி.மீ வேகத்தில் செல்லலாம் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் வாகனங்களுக்கு அதன் தன்மை பொறுத்து 60 கி.மீ முதல் 100 கி.மீ வரை வேகத்தை நிர்ணயித்து அதன் அடிப்படையில் புதிய அறிவிப்பை வெளியிட உத்தரவிட்டுள்ளது.