பாமக 35வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தை கடலூர் மாவட்டத்தில் நடத்த அனுமதிக்க முடியாது என்றும், விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சியில் நடத்திக்கொள்ளலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த உத்தரவில் பொதுக்கூட்டம் நடத்தும் உரிமையை தடுக்க முடியாது. ஆனால், அதே நேரத்தில் காவல்துறை தரப்பு வாதத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று நீதிபதி தெரிவித்தார்.
மேலும் பொதுக்கூட்டத்தை சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாது கட்சியினர் வழி நடத்த வேண்டும், இந்த பொதுக்கூட்டத்திற்கு கட்சி தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறினார்.
இந்த நிலையில் இந்த உத்தரவு குறித்து பாமக வழக்கறிஞர் பாலு கூறியபோது, கடலூரில்தான் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம், வேறு மாவட்டத்தில் நடத்த விருப்பமில்லை, உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் என கூறினார்.