கோவில்களில் வேஷ்டி அணியாமல் வருபவர்களுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் காத்திரமான கேள்விகாளை எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோவில்களில் வேஷ்டி அணியாமல் வருபவர்கள், மாற்று மதத்தினர் நுழைய தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் பேசிய நீதிபதி முனீஷ்வர் நாத் “நாடு முக்கியமா அல்லது மதம் முக்கியமா? சிலர் ஹிஜாபுக்காகவும், சிலர் கோவில்களில் வேட்டி அணிய கோருவதும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இது மதசார்பற்ற ஒரு நாடுதானா? அல்லது மதத்தால் பிளவுபட்ட நாடா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.