சமீபத்தில் நடந்த நெடுவாசல் போராட்டத்தின் போது சேலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி வளர்மதி கலந்து கொண்டதால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பின்னர் அவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட போதிலும், அவரது வருகை பதிவு குறைவாக உள்ளதால் தேர்வு முடிவுகளை வழங்க சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்தது.
பல்கலை நிர்வாகத்தின் இந்த முடிவினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வளர்மதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ''வளர்மதிக்கு தேர்வு முடிவுகளை வழங்க சாத்தியம் உள்ளதா என்பது குறித்து டிசம்பர் 13ந்தேதி தெரிவிக்க பல்கலைக்கழகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் படிக்கும் காலத்தில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் படிப்புக்குபின் போராட்டக்களத்தில் இறங்கலாம் என்றும் கல்லூரி மாணவி வளர்மதி தவறான இயக்கத்தினரால் வழி நடத்தப்பட்டதாகவும் நீதிபதி வேதனை தெரிவித்தார்.