அதிமுக பொது குழு தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் சற்றுமுன் அந்த தீர்ப்பு வெளியாகி உள்ளது.
அந்த தீர்ப்பில் அதிமுக பொது குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு மேலும் ஒரு வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொது குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிராகவும் ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்டவரை நீக்கிய சிறப்பு தீர்மானத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது என்பதால் ஓபிஎஸ் நீக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பொது குழு தீர்ப்பு செல்லும் என தீர்மானித்து உள்ளதால் தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.