சென்னை கலாஷேத்ரா கல்லூரி இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் ஆகிய இருவரும் வரும் திங்கட்கிழமை 12 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னையில் உள்ள மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி அவர்கள் உத்தரவிட்டிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் துன்பம் கொடுத்ததாக பேராசிரியர்கள் சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் இது குறித்து விசாரணை செய்ய மகளிர் ஆணைய தலைவர் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் பாலியல் புகார் தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமாரி விசாரணை நடத்திய போது சென்னை கலாச்சார கல்லூரி இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் ஆகிய இருவரும் விடுமுறையில் இருந்ததாக தெரிகிறது.
இதனை அடுத்து இருவரும் திங்கட்கிழமை 12:00 மணிக்கு சென்னையில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.