Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடடா இப்படி ஒரு நடத்துனரா ? – சமூகவலைதளங்களில் பாராட்டு !

அடடா இப்படி ஒரு நடத்துனரா ? – சமூகவலைதளங்களில் பாராட்டு !
, செவ்வாய், 3 டிசம்பர் 2019 (16:16 IST)
சென்னை-கோவை பேருந்தில் நடத்துனர் ஒருவர் பயணிகளிடம் எப்படி பேருந்தை தூய்மையாக வைத்துக்கொள்வது என விளக்கி சொல்லும் வீடியோ வைரல் ஆகியுள்ளது.

சென்னையில் இருந்து கோவை செல்லும் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றுபவர் சிவசண்முகம் மற்றும் ஓட்டுனர் சதாசிவம் ஆகியோர். நடத்துனர் சிவசண்முக பேருந்தில் வரும் பயணிகளிடம் கனிவாக பேருந்தை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வது என்றும் எந்தெந்த ஊர்களுக்கு எவ்வளவு பயணத்தொகை என்றும் இந்த பயணம் இனிமையாக அமையவேண்டும் என கனிவாக விளக்குகிறார்.

இதை அந்த பேருந்தில் பயணம் செய்யும் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த அனைவரும் அந்த நடத்துனரையும் ஓட்டுனரையும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இதைப்போல நடத்துனர்கள் அமைந்தால் பயணிகளுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையில் எந்த பிரச்சனையும் எப்போதும் வராது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதிய உணவில் செத்து கிடந்த எலி : மாணவர்கள் உடல்நலம் பாதிப்பு ...அதிர்ச்சி சம்பவம் !