Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரம்பித்தது கோடை காலம்.. இயல்பை விட அதிக வெப்பம் என வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Siva
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (07:53 IST)
கடந்த சில மாதங்களாக மழைக்காலம் மற்றும் குளிர்காலம் என தட்பவெப்ப நிலை சீராக இருந்த நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையத்தின் தகவலில் இருந்து தெரியவந்துள்ளது. 
 
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் இன்று வெப்பநிலை இயல்பு விட அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளது. இயல்பை விட இரண்டு முதல் நாள் மூன்று டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மட்டும் அதிகாலை நேரத்தில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
பொதுவாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை காலம் தொடங்கிவிடும் என்ற நிலையில் தற்போது பிப்ரவரி இறுதியிலேயே வெப்பநிலை அதிகரிக்க தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அடுத்து வரும் மூன்று மாதங்கள் பொதுமக்கள் கடும் வெயிலை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் குறிப்பாக மே மாதம் வரும் அக்னி நட்சத்திரம் பொதுமக்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கோடை காலம் தொடங்கி விட்டதை அடுத்து குழந்தைகள் மற்றும் முதியவர்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments