சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்து வரும் நிலையில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சென்னை மெரினா, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் தற்போது சென்னையில் சேப்பாக்கம்ம் மயிலாப்பூர்ம் திருவல்லிக்கேணிம் பட்டினப்பாக்கம்ம் எம்ஆர்சி நகர்ம் எழும்பூர்ம் வேப்பேரி ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
சென்னையில் மழை பெய்து வரும் காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதாகவும் நேற்று 710 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 756 கனஅடியாக இருப்பதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஏரியில் இருந்து விநாடிக்கு 150 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் சென்னையில் இன்னும் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.