வட கிழக்கு பருவ காற்று மற்றும் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த சில மாதங்களாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை சீசன் முடிந்து விட்டதாக அறிவிக்கப் பட்டிருந்தது
இருப்பினும் காற்றின் சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று இன்னும் 3 மணி நேரத்தில் மூன்று மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த மூன்று மணி நேரத்தில் நாகப்பட்டினம் செங்கல்பட்டு விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது