அடுத்த மூன்று மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் தோன்றிய புயல் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று முதல் 10-ஆம் தேதி வரை மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், தென்காசி, விழுப்புரம், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் உள்பட 25 மாவட்டங்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.