Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை மெட்ரோ ரயிலில் 4வது நாளாக இலவச பயணம்: பயணிகள் மகிழ்ச்சி

Advertiesment
மெட்ரோ ரயில் | பிரதமர் மோடி | சென்னை மெட்ரோ | சென்னை | PM Modi | Metro train | chennai metro train | Chennai Metro Rail | chennai metro
, புதன், 13 பிப்ரவரி 2019 (05:13 IST)
சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த 10,11,12 ஆகிய மூன்று நாட்கள் இலவச பயணம் அறிவிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 13ஆம் தேதியும் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த இலவச மெட்ரோ ரயில் பயணத்தால் சென்னை அண்ணா சாலையில் டிராபிக் பெருமளவு குறைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பூரில் கடந்த 10ஆம் தேதி அன்று நடைபெற்ற அரசு விழாவின்போது பாரத பிரதமர் நரேந்திர மோடி சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல் -டி.எம்.எஸ். வரையிலான புதிய மெட்ரோ வழித்தடத்தையும் தொடங்கி வைத்தார். இதனையடுத்து மெட்ரோ ரயில் பயணத்தை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில் பிப்ரவரி 10ஆம் தேதி மாலை 6 மணி முதல் இன்று பிப்ரவரி 11ஆம் தேதி இரவு வரை இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் 12ம் தேதியும் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக பொதுமக்கள் அளித்த வரவேற்பினை அடுத்து பிப்ரவரி 13ஆம் தேதி வரை இலவச பயணம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 நாட்கள் மெட்ரோ ரயிலில் இலவச பயணம் செய்து வரும் பொதுமக்கள் இந்த பயணத்தில் கிடைக்கும் வசதிகளை கணக்கில் கொண்டு தொடர்ந்து மெட்ரோ ரயிலை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாருடன் கூட்டணி ...? தே.மு.தி.க . துணை செயலாளர் அறிவிப்பு...