சென்னையில் பறிமுதல் செய்த கஞ்சாவை ரகசியமாக விற்க முயன்ற இரண்டு காவலர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கஞ்சா மற்றும் பான் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றை விற்பவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னை அயனாவரம் பகுதியில் 1 கிலோ கஞ்சாவோடு நின்று கொண்டிருந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவரை விசாரித்ததில் அவர் பெயர் திலீப் என்றும், அயனாவரம் பனந்தோப்பு காலணியில் வசித்து வரும் அவரது நண்பர்களும், காவலர்களுமான சக்திவேல் மற்றும் செல்வகுமார் ஒரு வழக்கில் பிடிபட்ட 1 கிலோ கஞ்சாவை விற்று தருமாறு திலீப்பிடம் கொடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து திலிப் குமார் மற்றும் இரண்டு காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.