Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூட்டப்பட்ட அரசு மருத்துவமனை கழிப்பறைகள்: தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (09:22 IST)
தண்ணீர் இல்லாதா காரணத்தால் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளது நோயாளிகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில மாதங்களாக மழை பொய்த்து போனதால் கடுமையான தண்ணீர்ப்பஞ்சம் நிலவி வருகிறது. தண்ணீர் பிரச்சனை காரணமாக பல ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதாகவும், ஒருசில ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. 
 
அதேபோல் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தே பணிபுரியும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும், ஒருசிலர் வேறு கிளைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் சென்னையில் உள்ள பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
தண்ணீர் பஞசத்தின் உச்ச கட்டத்தால் மெட்ரோவில் கழிப்பறைகளும் மூடப்பட்டதாம், அந்த வரிசையில் தற்போது ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் பல கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளது நோயாளிகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக இங்கு வரும் நிலையில் கழிப்பறைகளுக்கு பூட்டு போட்டு வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் இந்த நிலைமையை விரைவில் சரிசெய்ய வேண்டும் என்பது நோயாளிகளின் கோரிக்கையாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments