சென்னையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த டபுள் டெக்கர் பேருந்து சேவை, இன்னும் இரண்டு மாதங்களில் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
பொது போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் 20 புதிய மின்சாரத்தில் இயங்கும் இரட்டை அடுக்கு பேருந்துகளை வாங்கி இயக்க திட்டமிட்டுள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள் இந்த புதிய பேருந்துகள் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து நெரிசல் மற்றும் மேம்பாலங்கள் காரணமாக 2008-இல் நிறுத்தப்பட்ட இந்த சேவையை மீண்டும் கொண்டு வர, சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. தற்போது தனியார் நிறுவனம் மூலம் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மீண்டும் இந்த இரட்டை அடுக்கு மின்சார பேருந்துகள் அறிமுகமாவது, நகரின் பொது போக்குவரத்தில் புதிய மாற்றத்தை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.