தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்த நிலையில், சென்னையிலும் விரைவில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீண்ட நாள் கழித்து கோடையில் மக்களின் தாகத்தை போக்கும் விதமாகவும் நிலத்தின் வறட்சியைப் போக்கும் விதமாகவும் பலத்த மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, கொடைக்கானல், மதுரை ஆகிய பகுதிகளில் பலத்த காறுடன் கூடிய மழை பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருசில பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது.
இந்நிலையில் சென்னையில் மழை பெய்யுமா என கணிப்புகள் வெளியாகியுள்ளது. ஆம், தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக வரும் 18-ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
பகல் நேரங்களில் அனல் காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். சென்னையில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புண்டு. வரும் 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.
இதேபோல்தான் தமிழக வெதர்மேனும், வெப்பச்சலனம் சென்னைக்கு மிக அருகே உருவாகிறது. ஒருவேளை அதிர்ஷ்டம் இருந்தால் சென்னைக்கு மழை வாய்ப்பு உண்டு. சென்னையின் ஒரு சில பகுதிகளிலாவது அதிர்ஷ்டம் இருந்தால் நிச்சயம் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.