காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள காரணத்தால் தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு கிரீடம் வைத்தாற்போல அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி கொளுத்தி வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், தெலங்கானா முதல் கன்னியாகுமரி வரை காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளது.
சென்னையில் நிலையே வேறாக உள்ளது. ஆம், சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் மட்டுமே காணப்படுமாம், மற்றப்படி மழைக்கான வாய்ப்புகள் குறைவாம். இந்த அறிவிப்பு சென்னை மக்களை கவலையடைய செய்துள்ளது.