Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சென்டிரல் - திருப்பதி இடையே ரெயில் சேவை ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Siva
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (07:15 IST)
பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் சென்னை சென்ட்ரல் மற்றும் திருப்பதி இடையிலான ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருப்பதியிலிருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16204) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல் சென்னை சென்டிரலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16203) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு மைசூர் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16021) வரும் 26, 27 மற்றும் மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல் மைசூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16022) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் பெங்களூருவில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12658) வரும் 26, 27 மற்றும் மார்ச் 11, 12 கிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல் சென்னை சென்டிரலில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு பெங்களூர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments